Nu se pretează? Nu contează! Puteți returna produsele în până la 30 de zile
Cu un voucher cadou nu veți da greș. În schimbul voucherului, destinatarul își poate alege orice din oferta noastră.
Până la 30 de zile pentru returnare
கதையைவிட இன்பம் பயப்பது எதுவுமில்லை. கதை கூறுபவன் திறமுடையவனானால் இளைஞரையும் முதியோரையும், ஆடவரையும் பெண்டிரையும், அரசர் பெருமக்களையும் ஆண்டிகளையும் தன்வயப்படுத்துவது எளிது.
கதை, இன்பந்தருவது மட்டுமன்று; அவ்வின்பத்தின் வாயிலாக மாந்தர் அறிவுநலத்தையும் உணர்ச்சி நலத்தையும் தூண்டி அவர்களறியாமலேயே அவர்களின் உள்ளார்ந்த தன்மைகளை இயக்கி உருப்படுத்துவதிலும் கதைக்கு இணையானதாக எதுவுமில்லை. கலைத் திறங்குன்றிய நீதியாளர் இது செய்க, இது செய்யற்க எனக் கூறும் கூற்றுக்கள் மக்கள் அறிவைக்கூடத் தூண்டுவதில்லை. உணர்ச்சியைத் தூண்டுவதும் செயலாட்சி செய்வதும் அதனினும் எவ்வளவோ தொலைவு. கதையின் இவ்வாற்றலறிந்து சிறந்த நீதியாளர் அதனைக் கையாளுகின்றனர்.
ஆனால் மக்கள் உள்ளத்தில், சிறப்பாகத் தொய்வு மிக்க இளைஞர் உள்ளத்தில் உயர்குறிக்கோ ளுணர்ச்சி உண்டு பண்ண வேண்டுமானால் கதைக்குப் புறம்பாகவோ கதையி னுள்ளோ நீதி தனிப்படத் துண்டாகக் கூறப்படுதல் கூடாது. கதை கூறுபவர் கதையைமட்டும் கூறிச்செல்லல் வேண்டும். அதைக் கூறும் முறையில் நீதிகள் தாமாகவே உயர்வாழ்க்கைக் குறிக்கோள் உருவில் வாசிப்பவர் உள்ளத் தில் எழவேண்டும்.
கதைகள் வாசிப்பவர் அறிவு, வயது, சுற்றுச் சார்பு, மொழியறிவு ஆகியவற்றுக் கியைய எழுதப்பெறுதல் வேண்டும். இளஞ்சிறுவர்க்கு அறிவுத் தூண்டுதலைவிட உணர்ச்சித் தூண்டுதலான கதைகளே மிகுதியும் பொருத்த முடையன. சற்று வளர்ச்சியடைந்த மாணவர்க்கு உயர் உணர்ச்சிகளாய நகைத்திறம், பலவகை மெய்ப்பாடுகள், உளப்பாடுகள் (பாவங்கள்) தோற்றுவிக்கும் கதைகளும் அறிவுத்தூண்டுதலான கதைகளும் நற்பயனளிக்கும்.
Bună ziua! Sunt Libroamiko, consilierul dumneavoastră de cărți.
Cu ce vă pot ajuta?